விபத்தில் சிக்கிக்கொண்ட பாடசாலை மாணவர்கள்

மொனராகலை- பிபிலை வீதியின் தொடம்கொல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் காயமடைந்து பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிபிலை வெல்லஸ்ஸ தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்து போட்டியில் கலந்துகொள்ள சென்ற கனுல்வெல முஸ்லிம் மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.